24 மார்ச் 2019

கொத்தமங்கலத்தில் விடியோ பதிவுடன் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்

DIN | Published: 19th February 2019 09:57 AM

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத் தேர்தல் விடியோ பதிவுடன் திங்கள்கிழமை நடைபெற்றது.  
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாக இந்திய கம்யூ. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் த.செங்கோடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 
இதேபோல, தமிழகத்தின் பல்வேறு கூட்டுறவு சங்கங்களிலும் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் புகார் எழுந்ததால் உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு மண்டல வாரியாக விசாரனைக் குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்சி மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசூர்யா விசாரணை செய்தார். அதில், கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்தின் தேர்தலை போலீஸ் பாதுகாப்புடன் விடியோ பதிவு செய்து நடத்த உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிப்.11 ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் வனிதா வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் திங்கள்கிழமை(பிப்.18) நடைபெற்றது.  அதிமுக கூட்டணி சார்பில் 11 வேட்பாளர்களும், திமுக கூட்டணி சார்பில் 11 வேட்பாளர்ளும் அமமுக, சுயேட்சைகள் 6 என மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 1636 வாக்குகள் பதிவானது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி  முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாக்குபதிவு விடியோ பதிவு செய்யப்பட்டது. 

More from the section

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி
கந்தர்வகோட்டை அருகே தப்பாட்டம் ஆடியவரை தாக்கிய இருவர் கைது
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
புதுகை, கந்தர்வகோட்டை தொகுதிகளில்41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி