திங்கள்கிழமை 25 மார்ச் 2019

விதிகளை மீறியதாக 8 விசைப்படகுகள் பறிமுதல்

DIN | Published: 22nd February 2019 09:27 AM

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம்,  ஜகதாபட்டினத்தில் இரட்டைமடி வலையில்  மீன்பிடித்ததாக 2 விசைப் படகுகள் மற்றும்  அனுமதிச் சீட்டு பெறாத 6 விசைப்படகுகள் என மொத்தம் 8 விசைப்படகுகளை மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர்  வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.அரசால் தடைசெய்யப்பட்ட  இரட்டைமடி வலையை வைத்து கோட்டைப்பட்டினம் மற்றும் ஜகதாபட்டினம் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதாக  புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்வளத் துறையினர் மற்றும்  கடலோர காவல் படையினரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை  ஆய்வாளர் பாஸ்கரன்  மற்றும் திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய  ஆய்வாளர் ரகுபதி மற்றும் குழுவினர் இணைந்து சோதனை நடத்தியதில் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி  மீன்பிடித்த இரு விசைப்படகுகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், மீன்வளத் துறையிடம் அனுமதிச்சீட்டு பெறாமல் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து  விசாரணை நடத்திவருகின்றனர்.
 

More from the section

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி
கந்தர்வகோட்டை அருகே தப்பாட்டம் ஆடியவரை தாக்கிய இருவர் கைது
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
புதுகை, கந்தர்வகோட்டை தொகுதிகளில்41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி