சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

"போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பாடங்களை புரிந்து படித்தல் அவசியம்'

DIN | Published: 22nd January 2019 09:45 AM

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பாடப் புத்தகங்களை மாணவர்கள் ஆழ்ந்து புரிந்து படிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
 தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் கல்வித் தொலைக்காட்சி சார்பில் புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்  நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் மற்றும் நீட் தேர்விற்கான உத்திகள் குறித்த வழிகாட்டல் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்து  மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசியது:  அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், நீட் போன்றவற்றில் மாணவர்கள் சாதிப்பதற்கு ஏதுவாக தமிழக பாடத் திட்டங்கள் உயர்தரம் வாய்ந்தவையாக தொகுக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பாடங்களை நன்றாக ஆழ்ந்து படிக்க வேண்டும். புரிந்து  படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் போட்டித் தேர்வுகளில் நிச்சயமாக சாதிக்கலாம். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அறிவு, புத்திசாலித்தனமோ தேவை இல்லை. 
நல்ல உத்திகளோடு பயிற்சி எடுத்தால் போதும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வகுப்பில் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பது கிடையாது. கால அட்டவணை போட்டு படித்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வரவேற்றார். கல்வித் தொலைக்காட்சியின் ""ஏணிப்படிகள்'' குறித்து மாநில  ஒருங்கிணைப்பாளர்  சி. சதீஷ்குமார் பேசினார்.  
கல்லூரி இயக்குநர் ஜெய்சன் ஜெயபாரதன் வாழ்த்துரை வழங்கினார். நீட் தேர்வில் வெற்றிக்கான வழிகள் குறித்து சீக்கர்ஸ் அகாதெமி இயக்குநர் சுடர்க்கொடியும், நீட் தேர்வு உத்திகள் குறித்து பிரெய்ன் புளூம்ஸ் அகாதெமி இயக்குநர் மகேஷ்வரியும் சிறப்புரையாற்றினர். 
பின்னர் மாலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன் நன்றி கூறினார்.
 

More from the section

கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது
"தமிழையும் பண்பாட்டையும் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை'
தாய்மொழிகள் தின போட்டிகள்
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
தமிழின் கதையை இனிமேல்தான் எழுதத் தொடங்க வேண்டும்