21 ஏப்ரல் 2019

மூலங்குடி கோயிலில் பௌர்ணமி வழிபாடு

DIN | Published: 21st March 2019 08:00 AM

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு யாகபூஜை, வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
துர்காதேவி பரிகார ஸ்தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில் பௌர்ணமி பூஜையின் தொடக்கமாக துர்காதேவிக்கு யாகவேள்விகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகர் பூஜை, லலிதா சகஸ்கர நாம பாராயணம், துர்காஹோமம் ஆகியவை நடைபெற்றன. துர்காதேவிக்கு அபிஷேக, ஆராதனை, லலிதா த்ரிஸதி அர்ச்சனை  நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜையை சிவாச்சாரியார்கள் ராஜிவ் குருக்கள், முத்துக்குமார் ஆகியோர் வழிநடத்தினர்.
 

More from the section

விஷமத்தனமான ஆடியோ வெளியிட்டோர் மீது நடவடிக்கை தேவை
பொன்னமராவதி வன்முறை சம்பவத்தின் எதிரொலி: மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைப்பு, 50% பேருந்துகள் இயக்கப்படவில்லை
அறந்தாங்கி, விராலிமலையில் கோடை மழை
இன்றும் மதுக்கடைகள் மூடல்
ஒருங்கிணைப்பு குழு அமைத்து அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்