புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

லஞ்சம் வாங்கிய நிலஅளவையருக்கு 2 ஆண்டுகள் சிறை

DIN | Published: 21st March 2019 08:10 AM

புதுக்கோட்டை அருகே நிலத்தை அளக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மச்சுவாடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் குணம் (56). கடந்த 2013ஆம் ஆண்டு கந்தர்வக்கோட்டை பகுதியில் நில அளவையராகப் பணியாற்றினார். அப்போது, கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த தாண்டவமுத்து மனைவி பானுமதி என்பவர் தனது நிலத்தை அளக்க குணத்தை நாடியுள்ளார்.
நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் அவர். லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத பானுமதி, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸாரின் அறிவுரைப்படி லஞ்சப்பணத்தைக் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் நிலஅளவையர் குணத்தைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை     தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் நிறைவில், தலைமைக் குற்றவியல் நடுவர் அகிலா ஷாலினி புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும், பணியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.

More from the section

பிடாரி அம்மன் சித்திரைத் திருவிழா தொடக்கம்
வல்லத்திராகோட்டையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
மெய்க்குடிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்
வடகாடு - கொத்தமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும்