செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

ஒரத்தநாடு அருகே வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

DIN | Published: 11th September 2018 08:55 AM

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.  
திருவோணம் அருகே கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்தவர் முத்தையன் (48).  பேண்டு வாத்திய கலைஞர். இவர் கடந்த 8ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் செவ்வாய்ப்பட்டி ஆர்ச் அருகில் சென்றபோது நிலைதடுமாறி சாலையில் தவறிவிழுந்தார். 
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவோணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

மாணவர்களுக்கு தீயணைப்பு செயல் விளக்கப் பயிற்சி
ஆட்சியரகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்புப் போராட்டம்
கும்பகோணத்தில் அரிசி கடையில் திருட்டு
பெண்ணை தாக்கியதாக டாஸ்மாக் விற்பனையாளர் கைது
"தனி மனித ஒழுக்கம் முக்கியம்'