செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

சோழன் மாளிகை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

DIN | Published: 11th September 2018 09:19 AM

கும்பகோணத்தை அடுத்த சோழன்மாளிகை ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறைகளை கும்பகோணம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கும்பகோணம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் சோழன்மாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. 
இக்கட்டடத்தை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைத்தார். 
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.கே.பாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஊராட்சி கழக செயலாளர் இளங்கோ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துரையம்மாள், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

More from the section

மாணவர்களுக்கு தீயணைப்பு செயல் விளக்கப் பயிற்சி
ஆட்சியரகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்புப் போராட்டம்
கும்பகோணத்தில் அரிசி கடையில் திருட்டு
பெண்ணை தாக்கியதாக டாஸ்மாக் விற்பனையாளர் கைது
"தனி மனித ஒழுக்கம் முக்கியம்'