சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

பள்ளி மாணவர் விஷம் குடித்து சாவு

DIN | Published: 11th September 2018 09:20 AM

தஞ்சாவூர் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரனின் மகன் ராகுல் (17). இவர் வல்லம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்து வந்தார். 
அண்மையில் விஷம் குடித்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ராகுல் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், இவர் வல்லத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணைப் பின் தொடர்ந்து சென்ற ராகுலை பெண்ணின் உறவினர்கள் அண்மையில் தாக்கி மிரட்டினராம். 
இதனால், மனமுடைந்த ராகுல் விஷம் குடித்து இறந்தார் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

More from the section

குழந்தைகளுக்கு நீதி போதிப்பது அவசியம்
விவசாயியை வெட்டிய சகோதரர்கள் மூவருக்கு சிறை தண்டனை


மேலவன்னிப்பட்டு கோயிலில் திருட்டு முயற்சி

பாபநாசம் ம்ராமலிங்கசுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் தொடக்கம்
தண்டந்தோட்டம் கோயிலில் 7 பழங்காலச் சிலைகள் திருட்டு: 47 ஆண்டுகளுக்குப்பிறகு வழக்குப் பதிவு