24 பிப்ரவரி 2019

தொழில் நல்லுறவு விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 12th September 2018 08:28 AM

தமிழக அரசின் தொழிலாளர் துறை மூலம் வழங்கப்படவுள்ள தொழில் நல்லுறவு விருது பெற அக். 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் இர. கவிஅரசு தெரிவித்திருப்பது:
வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுத் தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவைப் பேணிப் பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக் குழுத் தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தைத் தொழிலாளர் துறையின் w‌w‌w.‌l​a​b‌o‌u‌r.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/​L​a​b‌o‌u‌r வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 
அல்லது இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டாரத் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அக். 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
 

More from the section

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள்
விடுபட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கஜா புயல்: நூறு நாள்களாகியும் மீள முடியாமல் தவிக்கும் மக்கள்
கும்பகோணம்  ஆசிகா தங்க மாளிகையின் 21 ஆம் ஆண்டு விழா
அரசு அலுவலர்களுக்கு முன்னோடி பயிற்சி