சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு

DIN | Published: 12th September 2018 08:21 AM

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த ஜான் பிரிட்டோ மகன் ஆண்டனி (26), தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (25).  இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டைக்கு சென்றுவிட்டு,  பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
இதனிடையே,  புதூர் குப்பையன் தெரு குப்புசாமி மகன் பாஸ்கர்(45) என்பவர் இருசக்கர வாகனத்தில் புதூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றார். புதூர் அம்மாமுத்த குளம் அருகே இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆண்டனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பலத்த காயமடைந்த சூர்யா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,  பாஸ்கர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர். 

More from the section

குழந்தைகளுக்கு நீதி போதிப்பது அவசியம்
விவசாயியை வெட்டிய சகோதரர்கள் மூவருக்கு சிறை தண்டனை


மேலவன்னிப்பட்டு கோயிலில் திருட்டு முயற்சி

பாபநாசம் ம்ராமலிங்கசுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் தொடக்கம்
தண்டந்தோட்டம் கோயிலில் 7 பழங்காலச் சிலைகள் திருட்டு: 47 ஆண்டுகளுக்குப்பிறகு வழக்குப் பதிவு