வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

விளையாட்டில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

DIN | Published: 12th September 2018 08:18 AM

பேராவூரணி வட்டார அளவிலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலும் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தடகளப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள் வரதன்,  கபிலன்,  நர்மதா,  இலக்கியா, சாருபாலா , சரிதா ஆகியோரும்,   குழுப்போட்டிகளில்  வலைப்பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) கெளசிகன், அரிசங்கர்,  வரதன் , சுகுமாறன்,  ஸ்ரீகெளரி  பிரியதர்ஷினி,  
நர்மதா,  சந்தியா ஆகியோரும்,   இறகுப்பந்து போட்டியில் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மணிகண்டன் , கமலேஷ்வரன், ஈஸ்வரன் , அஸ்வின் நவிதா  கிருத்திகா ஆகியோரும்,  கோ-கோ போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் 
பூபாலன் மற்றும் குழுவினர்,  எறிபந்து போட்டியில் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சிவசபரி மற்றும் குழுவினர் வெற்றி பெற்றனர். 
வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் மகேஸ்வரி,   பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் .எஸ்.கே.ராமமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்,   மாணவ, மாணவியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

More from the section

அனுமதியின்றி மதுபானம் விற்ற 6 பேர் கைது
திருவையாறில் தமிழிசை விழா நிறைவு
தஞ்சாவூர், குடந்தையில் ஜனவரி 19 மின் தடை
பாபநாசத்தில் திருவள்ளுவர் தின விழா
காணும் பொங்கல் விழா: பூங்கா, கோயில்களில் திரண்ட மக்கள்