சனிக்கிழமை 23 மார்ச் 2019

திருபுவனம் கொலை வழக்கு: பிப். 22 வரை 3 பேருக்கு போலீஸ் காவல்

DIN | Published: 19th February 2019 09:35 AM

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரை விசாரணைக்காக போலீஸார் திங்கள்கிழமை காவலில் எடுத்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் நிகழ்ந்த வாடகை பாத்திரக் கடை உரிமையாளர் வ. ராமலிங்கம் (48) பிப். 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் திருமங்கலக்குடி முகமது தபீக் (24), ஆவணியாபுரம் தவ்ஹித் பாட்சா (26), காரைக்கால் முகமது ஹசன் குத்தூஸ் ( 31) ஆகிய மூவரை போலீசார் திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
இவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மூவரையும் பிப். 22-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி வி. சிவஞானம் உத்தரவிட்டார்.
 

More from the section

அதிராம்பட்டினத்தில் ஜமாஅத் புதிய  நிர்வாகிகள் தேர்வு
கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்


8 மூட்டை பூஜை உபகரணங்கள், ரூ.2.39 லட்சம் பறிமுதல்

வலங்கைமான் கோயில் விழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
குறைந்தபட்ச கூலி வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை