புதன்கிழமை 20 மார்ச் 2019

வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி

DIN | Published: 19th February 2019 09:36 AM

காஷ்மீரில் வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஐ.என்.டி.யு.சி. ஆட்டோ தொழிற் சங்கத்தினர் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்குத் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு.சி. ஆட்டோ தொழிற் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், பழைய பேருந்து நிலைய ஐ.என்.டி.யு.சி. ஆட்டோ தொழிற் சங்கத் தலைவர் பழனிமாணிக்கம், செயலர் வீரமணி, பொருளாளர் ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
பாபநாசத்தில்... காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு பாபநாசம் பகுதியில் பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
கபிஸ்தலம் பாலக்கரையில் போலீஸார், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதேபோல், கணபதியக்ரஹாரம் கடைவீதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, கணபதியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி காணியிருப்பு கடைவீதியிலிருந்து ஊர்வலமாக வந்து கணபதியக்ரஹாரம் கடைவீதியை அடைந்தனர். அங்கு, உயிரிழந்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செல்லுத்தப்பட்டது.
அம்மாபேட்டை முத்தமிழ் பேரவை,  அம்மாபேட்டை ஜெய் குணாஅறக்கட்டளை உள்ளிட்டவை சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக,  இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவிலிருந்து ஊர்வலமாக சென்று, அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு,  உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் அம்மாபேட்டை லயனஸ் சங்க மாவட்ட தலைவர் ஆர்.குணசேகரன்,  முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜாமணி, நாம் தமிழர் கட்சி ந. கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் ஜான், மணி, ஆர். பிரசாத், ராகுல், சமூக ஆர்வலர் குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

பட்டுக்கோட்டையில்...

குளோபல் கல்வி நிறுவனங்கள், இந்திரா காந்தி யூத் பவுண்டேசன் ஆகியவற்றின் சார்பில்,  பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி, அறந்தாங்கி சாலையிலுள்ள காந்தி சிலை வரை நடைபெற்ற அமைதி ஊர்வலத்துக்கு சமூக ஆர்வலர் திட்டக்குடி ஏ.ஆர்.ஏ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.  இந்திரா காந்தி யூத் பவுண்டேசன் தலைவர் கே.மகேந்திரன், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, குளோபல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோபல் கல்வி நிறுவனத்தில் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். நிறைவாக ஊர்வலம் காந்தி சிலையை அடைந்ததும் அங்கு அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு