வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

மாசிமக திருவிழா: குடந்தை பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்ஸவம்

DIN | Published: 20th February 2019 09:07 AM

மாசி மகத்தையொட்டி கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாசி மகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி 
சுவாமி கோயிலில் தெப்ப உற்ஸவ விழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அப்போது 6 நாட்கள் கோயிலுக்குள்ளே புறப்பாடு நடைபெறும். நிறைவு நாளான மாசி மகத்தன்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்ஸவம் நடத்தப்படும்.
இந்நிலையில், பொற்றாமரை குளத்தில் 6 ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாததால், நிலை தெப்ப விழா நடைபெற்றது. 
தற்போது காவிரி ஆற்றிலிருந்து ஆழ்குழாய் மோட்டார் மூலம் பொற்றாமரை குளத்துக்குத் தண்ணீர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்ப உற்ஸவத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து காலையில் தெப்ப உற்ஸவமும், இரவில் மின்னொளி அலங்காரத்தில் தெப்ப உற்ஸவமும் நடைபெற்றது.

More from the section

அதிராம்பட்டினத்தில் ஜமாஅத் புதிய  நிர்வாகிகள் தேர்வு
கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்


8 மூட்டை பூஜை உபகரணங்கள், ரூ.2.39 லட்சம் பறிமுதல்

வலங்கைமான் கோயில் விழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
குறைந்தபட்ச கூலி வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை