24 மார்ச் 2019

காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்குப் பாடுபட முடிவு

DIN | Published: 21st February 2019 09:40 AM

காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவது என தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பிரிவின் நிர்வாகிகள் நியமன பதவியேற்பு விழா, தலித் சக்தி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் பொன். நல்லதம்பி தலைமை வகித்தார். காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராசன் சிறப்புரையாற்றினார்.
வருகிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மேலும், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. 
எஸ்.சி. பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆர். செந்தமிழ்ச்செல்வன், விவசாயப் பிரிவுத் தலைவர் கனகராஜ், ராகுல் காந்தி பேரவை மாநிலத் தலைவர் வி.எம். அப்பாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

தஞ்சை - திருச்சி  ரயில் மின்பாதையில் சோதனை ஓட்டம்
வேட்பாளர்களின் செலவின விவரங்கள் கண்காணிப்பு
பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து
இளைஞர் தற்கொலை
அணைக்கரையில் வீட்டுக்குள் புகுந்த முதலை