புதன்கிழமை 20 மார்ச் 2019

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN | Published: 22nd February 2019 09:18 AM

பட்டுக்கோட்டையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை பிப்.24-ம் தேதி சிறப்பாக கொண்டாடுவது. அன்று மாலையில், சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் நிறுவப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச் சிலைகள் திறப்பு விழாவையும், தொடர்ந்து அங்கு நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தையும் சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலர்கள் பி.சுப்பிரமணியன் (பட்டுக்கோட்டை), துரை.செந்தில் (மதுக்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன், அதிமுக மாவட்ட முன்னாள் செயலர்  இரா.கார்த்திகேயன், பொருளாளர் வி.மகாலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஏ.மலையய்யன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு