புதன்கிழமை 20 மார்ச் 2019

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: நேர்காணல் நிறுத்திவைப்பு

DIN | Published: 22nd February 2019 09:18 AM

தஞ்சாவூரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்காக வெள்ளிக்கிழமை (பிப்.22) தொடங்குவதாக இருந்த நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 201 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்குப் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடையோருக்கு வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 4-ம் தேதி வரை நேர்காணல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சில விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. 
இந்நிலையில் நிர்வாகக் காரணம் கருதி நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அழைப்புக் கடிதம் பெற்றவர்கள் நேர்காணலுக்காக வர வேண்டாம். மீண்டும் நேர்காணல் நடத்துவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.     


 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு