புதன்கிழமை 20 மார்ச் 2019

திருவையாறில் பிப். 28-இல் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர் கூட்டம்

DIN | Published: 22nd February 2019 09:18 AM

திருவையாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 28-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: திருவையாறு வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், அரசு மானியம் நுகர்வோர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.'


 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு