செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

கும்பகோணத்தில் அரிசி கடையில் திருட்டு

DIN | Published: 22nd January 2019 09:34 AM

கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் செல்வராஜ் (39). இவர் கும்பகோணம் இந்திராகாந்தி சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரிலிருந்த பூட்டுகள் திறக்கப்பட்டு  கடை திறந்து கிடந்தது. 
கடையினுள் சென்று பார்த்தபோது, கடையிலிருந்த பணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ. 30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

More from the section

வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி
திருபுவனம் கொலை வழக்கு: பிப். 22 வரை 3 பேருக்கு போலீஸ் காவல்
"நவீன நாடகத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு'
மாசி மகம் திருவிழா: கும்பகோணத்தில் 3 கோயில்களின் தேரோட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்: வைகோ