வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

"தனி மனித ஒழுக்கம் முக்கியம்'

DIN | Published: 22nd January 2019 09:34 AM

ஒவ்வொருவருடைய வாழ்விலும் தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கோ. சீனிவாசன் எழுதிய இன்பியல்... துன்பியல்... இதழியல் என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது எங்கள் மண். இது எங்கள் மூச்சு. இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவோம் என உறுதியேற்போம்.
நெறிசார்ந்த வாழ்க்கை முறை மனிதர்களுக்குத் தேவை. செய்தித்தாள்களில் திருட்டு, கொலை, கொள்ளை குறித்த செய்திகள் நாள்தோறும் வருகின்றன. இப்போது, பாலியல் தொல்லை, சிறுமி மீதான பாலியல் கொடுமை குறித்த செய்திகளையும் பார்க்க முடிகிறது. எனவே, ஒவ்வொருவரும் நம்மை நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் வாசன்.
இவ்விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது
பாபநாசம் அருகே தீயில் கருகி 53 ஆட்டுக்குட்டிகள் சாவு
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: நேர்காணல் நிறுத்திவைப்பு
திருவையாறில் பிப். 28-இல் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர் கூட்டம்