செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

மாணவர்களுக்கு தீயணைப்பு செயல் விளக்கப் பயிற்சி

DIN | Published: 22nd January 2019 09:35 AM

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தேசிய அளவிலான தீயணைப்பு மற்றும் ஆபத்துக் காலங்களில் வெளியேறுவது குறித்த செயல் விளக்கப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தாளாளர் ஏ.வி. நடனசிகாமணி தலைமை வகித்தார். தீயணைப்பு உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ம. இளஞ்செழியன் உள்ளிட்டோர் செயல் விளக்கம் அளித்தனர்.
இதில், துணை முதல்வர் கே. சுவாமிநாதன், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி
திருபுவனம் கொலை வழக்கு: பிப். 22 வரை 3 பேருக்கு போலீஸ் காவல்
"நவீன நாடகத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு'
மாசி மகம் திருவிழா: கும்பகோணத்தில் 3 கோயில்களின் தேரோட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்: வைகோ