புதன்கிழமை 16 ஜனவரி 2019

அரசாணை 1,310ஐ ரத்து செய்யக்கோரி திருச்சியில் நூதன போராட்டம்

DIN | Published: 11th September 2018 09:17 AM

தமிழக அரசின் 1,310 ஆவது அரசாணையை ரத்து செய்யக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாய சங்கத்தினர் ஆதிவாசி போல் இழைகளை ஆடையாய் அணிந்து   திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மக்கள்குறைதீர்முகாம் நிகழ்வைத் தொடர்ந்து, ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். முகாமில், மொத்தம் 400 மனுக்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, தமிழக அரசின் 1,310ஆவது அரசாணையை ரத்து செய்யக்கோரி, சீர்மரபினர் நல சங்கம் மற்றும் சமாஜ்வாதி, பார்வர்டு பிளாக் மற்றும் பல்வேறு ஜாதிச் சங்கங்கள் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை அடைந்தது. அதைதொடர்ந்து ஆதிவாசி போல் இலை, தழைகளுடன் கூடிய ஆடைகளை அணிந்து வந்தனர்.
1979ஆம் ஆண்டு வரை டிஎன்டி  பிரிவில் இருந்த 50க்கும் மேற்பட்ட சமுதாய மக்களை அரசாணை 1,310-இன் படி   டிஎன்சி பிரிவுகளாக மாற்றப்பட்டனர். இதனால் 68 ஜாதிகளை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்கள் கல்வி உதவி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் முன்னுரிமையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே அரசாணை 1,310ஐ ரத்து செய்யவேண்டும். தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைத்து விவசாயத்தை காக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிலரை மட்டும் மாவட்ட  ஆட்சியரகத்துக்குள் செல்ல போலீஸார் அனுமதித்து மற்றவர்களை வெளியே நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்தும் போராட்டம் மேற்கொண்டனர். அய்யாக்கண்ணு தலைமையில் சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

More from the section

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26.26 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகை: உரமில்லா கரும்பை விரும்பாத மக்கள்!
குண்டூரில் சூழல் பொங்கல் விழா


எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினருக்கு அழைப்பு