வியாழக்கிழமை 21 மார்ச் 2019

ஆசிரியமாமணி விருது வழங்கும் விழா

DIN | Published: 11th September 2018 09:16 AM

இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு அமைப்பின் சார்பில் ஆசிரியமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியர் தினம், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஸ்ரீரங்கத்தில் உள்ள செண்பகத் தமிழ் அரங்கு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான ஆசிரியமாமணி விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, முனைவர் 
ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவில், சோமரசம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வா. மனோகரனுக்கு ஆசிரியமாமணி விருது வழங்கப்பட்டது. 
இந்த விருதை, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் செ. செல்வராஜ் வழங்கினார்.
தொடர்ந்து கவிஞர் இராசு. நாச்சிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கில், "என் ஆசிரியர் பெருந்தகை ஓர் அறிவுத் திருக்கோயில்' எனும் தலைப்பில் கவிஞர் வா. மனோகரன், "என் ஆசிரியர் பெருந்தகை ஓர் அருட்பெருஞ்சோதி' எனும் தலைப்பில் கவிஞர் ந. மகிழ்மதியும் கவி பாடினர். அரங்கப் பொறுப்பாளர் இராச. இளங்கோவன், பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் அ. கோபிநாத், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் சு. சுகுமார், விக்னேஷ் ரெங்கா மெட்ரிக். பள்ளி தமிழாசிரியை ரெ. சுஜாதா, வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ந. செல்வமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

More from the section

விழிப்புணர்வு வாகன பிரசாரம்
3 சுயேச்சைகள் வேட்பு மனு
திருச்சிக்கு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: தேமுதிக வேட்பாளர் உறுதி
திருச்சியில் வீர முத்தரையர் சங்கம் போட்டி
அமமுக வெற்றியை தடுக்க முடியாது