புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

கோ-கோ போட்டி: சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி சாம்பியன்

DIN | Published: 11th September 2018 08:57 AM

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கோ-கோ போட்டியில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட8 மாவட்டங்களைச் சேர்ந்த 34 கல்லூரிகளைச் சேர்ந்த 340 மாணவிகள் பங்கேற்ற கோ-கோ போட்டி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. 
இதில் இறுதிப் போட்டியில்  திருச்சி புனித சிலுவைக் கல்லூரியை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்று பல்கலைக்கழக சாம்பியன் பட்டத்தை சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி கைப்பற்றியது.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியை 9-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 
வெற்றி பெற்ற  சீதாலட்சுமி கல்லூரிக்கு அந்தக் கல்லூரி முதல்வர் ஆர். பத்மாவதி பரிசு வழங்கினார். என். ராமசுவாமி அய்யர் கல்வி வளாக ஆலோசகர் உஷா சந்திரசேகர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஏ. ஷகிலா, உடற்கல்வி இயக்குநர் டி. சுதாமதி, பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆர். நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
இலவச கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
மது போதையில் தகராறு: இருவர் குத்திக் கொலை