திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

செப்.15-இல் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

DIN | Published: 11th September 2018 09:17 AM

திருச்சியில் இந்து முன்னணி சார்பில் மாநகரில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் செப்டம்பர் 15 ஆம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் என்று அதன் பொதுச் செயலர் என். முருகானந்தம்.
விநாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் நிலையில், திருச்சி மாநகரில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில்  சிறிய மற்றும் பெரிய அளவிலான 500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.  இதையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், காவிரிப் பாலத்தில் விசர்ஜன ஊர்வலத்தின்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகளை திங்கள்கிழமை மாலை பார்வையிட்ட பின்னர் அவர் அளித்த பேட்டி: எந்தாண்டிலும் இல்லாத அளவிற்கு நிகழாண்டில் தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது.இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி  இந்து முன்னணியின் மாநிலத் தலைவர்  கானேசுவர சுப்பிரமணி  செவ்வாய்க்கிழமை ( செப்.11) உண்ணாவிரதம் நடத்துகிறார். கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் இந்து முன்னணிசார்பில் அதிகளவில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.  அந்த சிலைகள் செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சி காவிரிஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும். ஏற்கெனவே பழைய கொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்த நிலையில், காவிரியாற்றின் பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்குரிய ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் முருகானந்தம். 

More from the section

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மணப்பாறையில் மாநில யோகாசன போட்டி
இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு: ஒருவர் கைது
பச்சமலையில் குறிசொல்பவர் அடித்துக்கொலை
மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம்