சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

திருச்சி மண்டலத்தில் காவலர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 906 பேர் தகுதி

DIN | Published: 11th September 2018 09:16 AM

திருச்சியில் நடைபெற்று வரும் காவலர் தேர்வில் இதுவரை நடைபெற்ற உடற்திறன் மற்றும் எழுத்துத் தேர்வில் 906 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தமிழக சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவல்துறை, சிறைத்துறை, மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை உள்ளிட்டவைகளில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 
கடந்த மார்ச் 11 ஆம் தேதி  நடைபெற்ற எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன.  திருச்சி, கரூர், பெரம்பலூர், 
அரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான 
தேர்வுகள் திருச்சியில் நடந்து வருகின்றன.
செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கான உடற்திறன்தேர்வுகளில் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தேர்வுகள் நடைபெற்றன.  இதில் ஆண்கள் 1,140, பெண்கள் 934 என மொத்தம் 2,074 பேர் பங்கேற்றனர். அதில்  ஆண்கள் 779 பேரும், பெண்கள் 127 பேரும் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சான்றுகள் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

More from the section

திருமண உதவி திட்டங்கள்: திருச்சிக்கு ரூ.23.24 கோடி ஒதுக்கீடு
குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
மினி பேருந்துகளில் திடீர் ஆய்வு
காதலர் தின கொண்டாட்டம்: திருச்சியில் இந்து அமைப்புகள் எதிர்ப்பு