புதன்கிழமை 16 ஜனவரி 2019

பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

DIN | Published: 11th September 2018 09:17 AM

திருவானைக்கா பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர். 
திருவானைக்கா பெரியார் நகரைச் சேர்ந்த பாஸ்கர்  மனைவி வைதேகி (45). இவர் அப்பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த மர்மநபர்கள் இருவர் வைதேகி கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலிச்செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

More from the section

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26.26 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகை: உரமில்லா கரும்பை விரும்பாத மக்கள்!
குண்டூரில் சூழல் பொங்கல் விழா


எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினருக்கு அழைப்பு