வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

மனைவி நல வேட்பு நாள் விழா

DIN | Published: 11th September 2018 08:57 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் 11-ஆம் ஆண்டு மகரிஷி பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் ஆ. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எல். அருளரசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் சி. கிரீஸ்குமார், மருத்துவர்கள் ஜி. சாமிஜி, ஆர்.எல். அனுஷா சாமிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை துணைத் தலைவர் என். பொன்னுச்சாமி உலக சமாதானக் கொடியேற்றினார். 
இறை வணக்கத்தை ஜி. பூங்கோதையும், குரு வணக்கத்தை கே. ராஜேஸ்வரியும் கூற, துணைப் பேராசிரியர் அக்குஹீலர் வே. கல்யாணி தவ நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மகரிஷி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் ஆசான். கரு. ராஜகோபால் சிறப்புரையாற்றினார். மனைவி நல வேட்பு நாளை முன்னிட்டு தம்பதியினர் காந்த பரிமாற்ற தவம் மேற்கொண்டனர்.  
 

More from the section

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 3.5 லட்சம் இந்திய பணம் பறிமுதல்
சுற்றுலா பொங்கல் விழா
அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா
காணும் பொங்கல்: முக்கொம்பில் குவிந்த மக்கள் கூட்டம்!
ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்