வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

ஸ்ரீரங்கத்தில் 38 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

DIN | Published: 11th September 2018 09:16 AM

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளில் 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில்  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் வழக்கம். பின்னர் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படும். நிகழாண்டில் வருவாய்த்துறையினரிடம் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற வேண்டியது அவசியம் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, நிகழாண்டில்  ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளில் 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

More from the section

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 3.5 லட்சம் இந்திய பணம் பறிமுதல்
சுற்றுலா பொங்கல் விழா
அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா
காணும் பொங்கல்: முக்கொம்பில் குவிந்த மக்கள் கூட்டம்!
ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்