வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

18 நாள்களாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

DIN | Published: 11th September 2018 08:58 AM

கொள்ளிடம் ஆற்றில் வீணாக தண்ணீர் வெளியேறுவதால் பாசனத்திற்கு வரும் வாய்க்கால்களுக்கு கடந்த 18 நாட்களாக தண்ணீர் செல்லாததால் கார் பருவத்தில் சாகுபடி செய்த நெற் பயிர் கருகும் நிலையில் உள்ளதென விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். 
திருச்சி முக்கொம்பு மேலணையில் மதகுகள், பாலங்கள் இடிந்ததால் காவிரியாற்றில் குறைந்தளவு தண்ணீர் பாசனத்திற்குச் சென்றது, அதிகளவிலான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வீணாகச் சென்று கடலில் கலந்தது. 
கொள்ளிடம் ஆறு இருக்கும் பகுதியின் வலது புறத்தில் உள்ள வாய்க்கால்களின் தலைப்பு பகுதி இப் பகுதியில்தான் உற்பத்தியாகிறது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் கரைபுரண்டோடியதால் இப் பகுதியில்  மணல் மலைபோலக் குவிந்தது. இந்நிலையில் கொள்ளிடம் அணைக்கட்டு மதகுபாலம் உடைந்து  கொள்ளிடம் ஆற்றில் வீணாக வெளியேறிய தண்ணீர் அடைக்கப்பட்டது.  இருப்பினும்  கொள்ளிடம் ஆற்றின் தலைப்புப் பகுதியில் உள்ள அய்யன்வாய்க்கால், பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால்களில் கடந்த 18 நாட்களாக தண்ணீர் செல்லவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் விவசாயிகளும், விவசாயி சங்க அமைப்புகளும் பல முறை கூறியும் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை இல்லை என்கின்றனர் இப் பகுதி விவசாயிகள்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது காவிரியாற்றில் தண்ணீர் கரை புரண்டோடியதால் இந்தத் தலைப்பு பகுதி மற்றும் குணசீலம் அருகேயுள்ள மஞ்சகோரை பகுதியிலும் மிகப்பெரிய அளவில் மணல் திட்டு ஏற்பட்டதால்  வாய்க்கால்களில் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இந்த மணல் திட்டுகளை விரைவில் அகற்றி, பாசனத்திற்கான தண்ணீரைக் கொடுப்போம் என்றனர்.

More from the section

பாரதிதாசன் பல்கலை. எம்.காம். தேர்வு முடிவு வெளியீடு
பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு
முறையாக படித்த வழக்குரைஞரா?  விசாரிக்க குழு அமைப்பு
வீட்டுக் கழிவுகளை உரமாக்கும் திட்டம்: 3 பேருக்கு தங்க நாணயம் பரிசு
ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் மாயம்