திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

கால்நடை  மருத்துவ ஆராய்ச்சி  மையத்தில் மடிக்கணினி  திருட்டு

DIN | Published: 12th September 2018 08:33 AM

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருள்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கொட்டப்பட்டு  பகுதியில் தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பேராசிரியராக இருப்பவர் ரிச்சர்டு ஜெகதீசன். இவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள  தனது அறையில், பயிற்சி விளக்கத்துக் பயன்படும்  மடிக்கணினி, விடியோ பிளேயர் உள்ளிட்ட  சாதனங்களை வைத்து பூட்டிச்சென்றார். செவ்வாய்க்கழமை காலை மீண்டும் வந்து பார்த்தபோது, அறையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More from the section

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மணப்பாறையில் மாநில யோகாசன போட்டி
இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு: ஒருவர் கைது
பச்சமலையில் குறிசொல்பவர் அடித்துக்கொலை
மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம்