செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

திருச்சியில் செப்.15இல் அண்ணா சைக்கிள் போட்டி

DIN | Published: 12th September 2018 08:32 AM

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
13 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிள் போட்டி நடைபெறும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சைக்கிள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மாணவ, மாணவிகள் போட்டி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று கொண்டு வர வேண்டும். வயது சான்றிதழ் பெற்று வராதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு போட்டியில் பங்கு பெற்றதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இந்த சைக்கிள் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு, 0431- 2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
 

More from the section

ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்
மாவட்டத்தில்  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்  தேதி மீண்டும் ஒத்திவைப்பு
குழந்தைகளின் விருப்பம், செயல்களை கவனிக்க வேண்டும்
மணப்பாறை நாகநாத சுவாமி கோயிலில் வலம்புரி சங்கு வழிபாட்டு வேள்வி


மண்ணச்சநல்லூர் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சி