வியாழக்கிழமை 21 மார்ச் 2019

ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

DIN | Published: 21st September 2018 09:38 AM

அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஏழை, எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ள நேரு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கினைந்து பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை வியாழக்கிழமை நடத்தினர். விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கதிர் வேல் தலைமை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் தாளாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளார் தாராதேவி, கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் சத்யநாராயணன் வாழ்த்திப் பேசினார்.
இந்த விழாவில், 60 மாணவ, மாணவிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டன. 4 பேருக்கு ரூ.20 ஆயிரம் உயர்கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. 4 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற பெற்ற கணித ஆசிரியர் கருப்புசாமி, முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் விஸ்வநாதன், சிதம்பரம், கருப்பையா, செந்தில், முருகானந்தம், வீராசாமி, விக்னேஷ், ராம்ராஜ், மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More from the section

விழிப்புணர்வு வாகன பிரசாரம்
3 சுயேச்சைகள் வேட்பு மனு
திருச்சிக்கு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: தேமுதிக வேட்பாளர் உறுதி
திருச்சியில் வீர முத்தரையர் சங்கம் போட்டி
அமமுக வெற்றியை தடுக்க முடியாது