சனிக்கிழமை 23 மார்ச் 2019

போலி மது தயாரித்து விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது

DIN | Published: 22nd February 2019 09:13 AM

துறையூர் அருகே போலி மது தயாரித்து விற்ற வழக்கில் தொடர்புடைய இருவரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
துறையூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர்(பொ) கண்ணதாசன் தலைமையில் மதுவிலக்கு அமல் போலீஸார் பெரமங்கலத்தில் வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் மது பாட்டில்கள் மீது ஒட்டப்படும் லேபிள்கள்,  ஹாலோகிராம் ஸ்டிக்கரும் இருந்தது. இதையடுத்து, காரில் இருந்து இருவரிடம் விசாரித்ததில், அவர்கள் இருவரும், போலி மது பாட்டில்கள் விற்பனையில் தொடர்புள்ளவர்களும், போலீஸாரால் தேடப்பட்டு வரும் மேலகொண்டயம்பேட்டையைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்தி(29), நாராயணன் மகன் அஜய்(20) என்பதும், இவர்கள் இருவரும் பிப். 19-இல் கைதான ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த சரத் குமாருடன் போலி மது தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார்,  கார், ஸ்டிக்கர் லேபிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

More from the section

மக்களின் ஆரவாரமே திமுகவின் வெற்றிக்கு அடையாளம்
பெரம்பலூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை  
திமுகவில் இணைந்தார் வி.பி. கலைராஜன்
திருச்சியில் வாகன சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல்
மார்ச் 23, 24இல் திருச்சியில் தினமணி கல்விக் கண்காட்சி-2019