வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்

DIN | Published: 22nd January 2019 09:29 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் கிராமத்தில் அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. 
அதனையொட்டி திங்கள்கிழமை  கருங்குளம் பெரியதனம் அந்தோனி, மணியம் சேசுராஜ், ஊர் முக்கியஸ்தார் ஏனோக், ஆலோசகர் பி.ஆர். ரத்தினம், பொருளாளர் ஆசிரியர் அமுல் மற்றும் முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பி.வி.கே. பழனிச்சாமி ஆகியோர் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தி, ஆலய திடலில் அமைக்கப்படவுள்ள வாடிவாசல் அருகே முகூர்த்தக்கால் ஊன்றினர்.

More from the section

காவிரிப் பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: தஞ்சாவூரில் மார்ச் 2 இல் பேரணி
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
ரூ. 16.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடைகள் திறப்பு


போலி மது தயாரித்து விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது

ம.நீ.ம தலைமையில் 3-ஆவது அணி: கமல்ஹாசன் நம்பிக்கை