வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

மாவட்டத்தில்  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்  தேதி மீண்டும் ஒத்திவைப்பு

DIN | Published: 22nd January 2019 09:28 AM

திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2018, செப்.1 ஆம் தேதி  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தவறாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், அதை திருத்தம் செய்து கொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கான படிவங்களும் பெறப்பட்டன.  முன்பு  அறிவித்து நீட்டிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, ஜன.21 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
 பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன. 
இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றை கண்டறிந்து உரிய  களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்திய தேர்தல் ஆணையத்தின் "ஈஆர்ஓ நெட்' மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இப்பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் இறுதி வாக்காளர் பட்டியல்களை வரும் 31ஆம் தேதி வெளியிட  தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.
எனவே, திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி) ஆகிய 9 பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்றார் ஆட்சியர்.

More from the section

காவிரிப் பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: தஞ்சாவூரில் மார்ச் 2 இல் பேரணி
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
ரூ. 16.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடைகள் திறப்பு


போலி மது தயாரித்து விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது

ம.நீ.ம தலைமையில் 3-ஆவது அணி: கமல்ஹாசன் நம்பிக்கை