திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

பாரதியார் பிறந்த நாள் விழா

DIN | Published: 14th December 2018 08:44 AM

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்தின் 78-ஆவது மாத அமர்வுக் கூட்டம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் கௌரவத் தலைவர் ப.ச.வைரக்கண்ணு தலை மை வகித்தார். ஆலோசகர் அசோக் ராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் சுந்தர.பழனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில் பாரதியைப் போற்றுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்று மகாகவியை பாராட்டி கவிதை வாசித்தனர். பாரதியும் தமிழும் என்ற தலைப்பில் செயலர் சொ.முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பள்ளி வளாகத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

More from the section

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்


மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் ரூ.2.68 கோடி இடுபொருள் மானியம் விநியோகம்: மாவட்ட ஆட்சியர்

சித்த வைத்தியர்கள் மாநாடு
மாநில குத்துச் சண்டைப் போட்டி: கடலூர் மாணவர்கள் சிறப்பிடம்


வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி பூஜை