புதன்கிழமை 19 டிசம்பர் 2018

கஜா புயல் மீட்புப் பணி: 3 மாவட்டங்களுக்கு பொருள்கள் அனுப்பிவைப்பு

DIN | Published: 18th November 2018 02:06 AM

கஜா புயல் மீட்புப் பணிக்காக கடலூர் மாவட்டத்திலிருந்து நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மீட்புப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் முதலில் கடலூர் மாவட்டத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், புயலானது வேதாரண்யம் சென்றதால் மாவட்டத்தில் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து தேவையான மீட்பு பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார். அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு மரங்கள் அறுக்கும் தலா 25 இயந்திரங்கள், டீசல் ஜெனரேட்டர் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மரம் அறுக்கும் 25 இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடலூர் மாவட்ட புயல் பணிக்காக வந்திருந்த 78 தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 2 கம்பெனியைக் கொண்ட 60 கமாண்டோ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்றிருந்த 117 தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவைப்படும் பட்சத்தில் அரசு கோரினால் கடலூர் மாவட்டத்திலிருந்து பணியாளர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

More from the section

நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி
கடலூர் சிறையிலிருந்த கைதி திடீர் சாவு
நெகிழி தடைக்கு கூடுதல் அவகாசம்: வணிகர் சங்கம் கோரிக்கை மனு
ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு
பள்ளிவாசலில் உண்டியல் திருட்டு