புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

கனரக சரக்கு வாகன உரிமையாளர்கள் கவனத்துக்கு...

By  சிதம்பரம்,| DIN | Published: 11th September 2018 08:50 AM

மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கனரக சரக்கு வாகனங்கள், தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற சரக்கு வாகனங்களுக்கு திருத்தப்பட்ட அச்சு எடை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆர்.இளமுருகன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் அலுவலக எல்லைக்குள்பட்ட கனரக சரக்கு வாகன உரிமையாளர்கள், தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனப் பதிவுச் சான்று
 (தஇ), அனுமதிச் சீட்டு (டங்ழ்ம்ண்ற்) ஆகியவற்றை சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து உரிய திருத்தங்களை 30.9.2018-க்குள் செய்துகொள்ள வேண்டும். வாகனத்தின் எடை மாற்றத்துக்கான கட்டணம், அனுமதி சீட்டில் எடை மாற்றத்துக்கான கட்டணம், வித்தியாச வரி ஆகியவற்றை 30-9-2018-க்குள் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 

More from the section

மாணவர்களுக்கு ரோல்பால் போட்டி
வடலூரை புனித தலமாக அறிவிக்கக் கோரி மனு
ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை
சிதம்பரத்தில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமை: மாதர் சங்கத்தினர் சாலை மறியல்