24 பிப்ரவரி 2019

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 08:55 AM

விருத்தாசலத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், லாரன்ஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், காடாம்புலியூரில் உள்ள தாமரைக் குளத்துக்கு சுற்றுவேலி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி புதன்கிழமை (செப்.12) ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. வருகிற 30-ஆம் தேதி  திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More from the section

1,198 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் : இன்றும் நடைபெறுகிறது
மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தல்: வேட்புமனு தாக்கலில் ஆர்வமில்லை
ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: மாவட்ட ஆட்சியர்
நெல் கொள்முதல் நிலையம் பிரச்னை: சார்-ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு பண்ருட்டியில் திருக்கல்யாணம்