புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

சாராயம் கடத்தியவர் கைது

DIN | Published: 12th September 2018 08:57 AM

ஆட்டோவில் சாராயம் கடத்திய புதுவை இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
கடலூர் ஆல்பேட்டையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவில் சாராயம் கடத்தப்பட்டதை காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, 8 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 200 லிட்டர் சாராயத்தையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.   இதுதொடர்பாக, ஆட்டோவை ஓட்டி வந்த புதுவை மாநிலம், குருவிநத்தத்தைச் சேர்ந்த மணிமாறன் மகன் சூரியராஜ் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.
 

More from the section

மாணவர்களுக்கு ரோல்பால் போட்டி
வடலூரை புனித தலமாக அறிவிக்கக் கோரி மனு
ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை
சிதம்பரத்தில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமை: மாதர் சங்கத்தினர் சாலை மறியல்