புதன்கிழமை 16 ஜனவரி 2019

பகுத்தறிவாளர் கழகக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 08:54 AM

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது. 
 மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரா.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் 
க.எழிலேந்தி வரவேற்றார். மாவட்ட மகளிரணித் தலைவி செ.முனியம்மாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சிவன், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் ராசேந்திரன், க.தாயன்பன், மாவட்டத் தலைவர் தென்.சிவக்குமார், தி.க. மாவட்டச் செயலர் நா.தாமோதரன், சஞ்சீவிராயர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலர் ரா.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
 கூட்டத்தில், பெரியாரின் 140-ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். 
 மாவட்ட ஆசிரியரணித் தலைவர் வீ.அரசு நன்றி கூறினார்.
 

More from the section

கூட்டுறவுச் சங்கப் பேரவைக் கூட்டம்
கஜா புயல் பாதிப்பு: தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு அரசு உதவி
சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி
பேரூராட்சிப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் விநியோகம்
ஜன.20-இல் திருக்குறள் முற்றோதல்