புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

பாரதியார் நினைவு தினம்

DIN | Published: 12th September 2018 09:35 AM

மகாகவி பாரதி நினைவு தினம் கடலூரில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற பாரதி நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு மன்றத் தலைவர் கடல்.நாகராஜன் தலைமை வகித்தார். அரிமா சங்கம் இஸ்ரேல் முன்னிலை வகித்தார். 
துர்கா தனிப் பயிற்சி கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் பாரதியார் உருவப் படத்துக்கு மாலை  அணிவித்து  மரியாதை செலுத்தினார். 
எழுத்தாளர் தில்லை ராஜேந்திரன் பாரதியார் கவிதைகளின்  சிறப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பாரதி உருவப் படத்துக்கு மலரஞ்சலி  செலுத்தினர். 
ஆசிரியை ஜெயலட்சுமி  நன்றி கூறினார்.

More from the section

மாணவர்களுக்கு ரோல்பால் போட்டி
வடலூரை புனித தலமாக அறிவிக்கக் கோரி மனு
ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை
சிதம்பரத்தில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமை: மாதர் சங்கத்தினர் சாலை மறியல்