செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

மணியாக்காரன் குட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN | Published: 12th September 2018 09:36 AM

பள்ளிப்படை  மணியாக்காரன் குட்டையில் தனியார் ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் அருகே பள்ளிபடை பகுதியில் மணியாக்காரன் குட்டை உள்ளது. இந்த குட்டையானது தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. குட்டை பகுதியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு, தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், குட்டை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி தங்கம் தலைமையில், வட்டாட்சியர் தழிழ்செல்வன், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் முன்னிலையில் விநாயகர் கோயில், தடுப்பு சுவர்கள் பொக்லைன் முலம் இடித்து அகற்றப்பட்டன.

More from the section

அண்ணாமலைப் பல்கலை.யில் பல் மருத்துவ கல்வியியல் நிகழ்ச்சி
பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவன் மீட்பு
தைப்பூசம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீர்த்தவாரி
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு
ஜனவரி 26,27-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாடு