சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மண்டல மேசைப்பந்து போட்டி:  கடலூர் அரசுக் கல்லூரி அணி சிறப்பிடம்

DIN | Published: 12th September 2018 08:55 AM

மகளிருக்கான மண்டல அளவிலான மேசைப்பந்து போட்டியில் கடலூர் அரசுக் கல்லூரி அணி இரண்டாமிடம் பெற்றது. 
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கடலூர் மண்டல அளவிலான மகளிர் மேசைப் பந்துப் போட்டி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. போட்டியை கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ப.குமரன் தொடக்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கடலூர் புனித வளனார் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் முதலிடத்தையும், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கடலூர் மண்டல அளவிலான போட்டிகளுக்கான மகளிர் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி பரிசுகளை வழங்கினார். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் உடல்கல்வி இயக்குநர் தி.குமணன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

More from the section

ரூ.6 ஆயிரம் பெற தகுதியான விவசாயிகள் பெயர் பட்டியல் வெளியீடு
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு
புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்பு
பள்ளி ஆண்டு விழா
"5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கூடாது'