சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 08:55 AM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் துரை.ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், சிதம்பரம் 
காந்தி சிலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு தலைமை வகித்தார். கோவி.பாவாணன், பேரறிவாளன், கமல்ராஜ், இளவழுதி, எழில்வேந்தன், வேல்முருகன், பெரு.சரித்திரன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் கே.ஆதிமூலம் வரவேற்றார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். 
கடலூர் மாவட்டச் செயலர் பால.அறவாழி, மாநில துணைச் செயலர் கோ.நீதிவளவன், நீதிவள்ளல், குறிஞ்சிவளவன், செல்வமணி, கங்கைஅமரன், தாய்மண் சிற்றரசு, இன்பவளவன், மின்னல் சிவராஜ், கிருபாநிதி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். நகர துணைச் செயலர் மாரி நன்றி கூறினார்.

More from the section

81 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச வாய், முகம், தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தினம்
நிர்வாகி நியமனம்
சாலைப் பாதுகாப்பு வார விழா