வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

விஸ்வகர்ம சங்கக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 08:54 AM

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்துப் பேசினார். ஆலோசகர் பாவாடை பத்தரப், எம்.கோவிந்தராஜ், ஏ.ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் பி.முத்துக்குமரன் வரவேற்றார். பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இளைஞரணி செயலர் எஸ்.ரமேஷ், தொழில்சங்க செயலர் ஆர்.ராமச்சந்திரன், எம்.பாலசுப்பிரமணியன், ஆர்.மாரியப்பன், எம்.சுரேஷ், தில்லைநடராஜன், ஆர்.உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞரணி துணைச் செயலர் கே.பாலாஜி நன்றி கூறினார். கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சேகரிடம் ஸ்ரீவிஸ்வகர்மா, ஸ்ரீகாயத்ரிதேவி விக்ரகம் செய்ய நிதி உதவி அளிக்கப்பட்டது . 
தீர்மானங்கள்: சிதம்பரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தை சிறப்பாக நடத்துவது, செப்.17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விஸ்வகர்ம தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது.

More from the section

ரூ.6 ஆயிரம் பெற தகுதியான விவசாயிகள் பெயர் பட்டியல் வெளியீடு
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு
புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்பு
பள்ளி ஆண்டு விழா
"5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கூடாது'