சனிக்கிழமை 23 மார்ச் 2019

பள்ளி ஆண்டு விழா

DIN | Published: 22nd February 2019 09:10 AM

சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக் குழுச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் கே.செல்வக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிதம்பரம் நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்திரஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

விழாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சி.ஆர்.லட்சுமிகாந்தன் அறக்கட்டளை சார்பில், காமராஜ் கல்விக் குழுமத் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் ஊக்கத்தொகை வழங்கினார். 
நிகழ்கல்வி ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது முதுகலை ஆசிரியை கே.உஷா, சிறந்த அலுவலர் விருது கே.கோவிந்தராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் மு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியை தமிழாசிரியர் என்.வேலாயுதம் தொகுத்து வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் நன்றி கூறினார்.

More from the section

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பிறந்த நாள் விழா
ஒருங்கிணைந்த பண்ணை முறைத் திட்டம்: பல்கலை.யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்குத் தடை
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை: எஸ்பி