சனிக்கிழமை 23 மார்ச் 2019

"5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கூடாது'

DIN | Published: 22nd February 2019 09:10 AM

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் எம்எல்சி சி.ஆர்.லட்சுமிகாந்தன் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 5, 8-ஆம் வகுப்பு பயிலும் சின்னஞ்சிறு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது அவர்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சலை உண்டாக்கும். தேர்ச்சி பெறாதவர்கள் படிப்பைத் தொடர

மாட்டார்கள். மேலும் அரசு, ஒன்றிய பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாகி  மாணவர்களின் எண்ணிக்கை குறையும். 

ஒரு ஆண்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்து பொதுத்  தேர்வு நடத்துவதால் பள்ளியின் இதர வகுப்புகள், கல்விப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை  பாட போதனை நேரம் அதிகமாக பாதிக்கப்படும்.  

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது, நடத்தாதது மாநில அரசின் விருப்பம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு ஏன் அவசரப்படுகிறது. நிகழாண்டிலேயே பொதுத் தேர்வு நடத்த ஏன் அவசரம் காட்ட வேண்டும். எனவே, மாணவர்கள், பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பளு,  மன உளைச்சலை உருவாக்கியுள்ள இந்த பொதுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை வேண்டுகிறேன் என அதில் லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.

More from the section

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பிறந்த நாள் விழா
ஒருங்கிணைந்த பண்ணை முறைத் திட்டம்: பல்கலை.யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்குத் தடை
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை: எஸ்பி