திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கலாசார பரிவர்த்தனை: காரைக்கால் இளைஞர்கள் டாமன்  பயணம் 

DIN | Published: 18th December 2018 10:44 AM

கலாசார பரிவர்த்தனை பயணமாக, காரைக்கால் இளைஞர்கள் டாமன் பிரதேசத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
நேரு இளையோர் மையம் சார்பில் மாநில அளவிலான இளையோர் கலாசார பரிவர்த்தனை முகாம் டாமன் யூனியன் பிரதேசத்தில் டிச. 18 முதல் 31 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க காரைக்கால் நேரு இளையோர் அமைப்பில் உள்ள 20 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் புதுச்சேரியிலிருந்து ரயில் மூலம் டாமன் செல்லும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காரைக்காலில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்த முகாமின்போது, டாமனில் தங்கியிருக்கும் இளைஞர்கள், அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்வதோடு, தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும், சமய நல்லிணக்கத்தைக் காக்கும் விதமாகவும், இளைஞர்களை தேச நிர்மானத்தில் பயன்படுத்தவும், தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுவர் என நேரு இளையோர் மையத்தினர் தெரிவித்தனர்.

More from the section

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
மின் கட்டண நிர்ணயம்: நாளை கருத்துக் கேட்பு
அரசின் இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
இளையோர் தலைமைத்துவ பயிற்சி முகாம்
நிர்வாகிகள் பதவியேற்பு